நாளை அதிமுக 49வது ஆண்டு விழா: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான பணிகளை இன்றே தொடங்குவோம் என ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

--

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்  49வது ஆண்டு விழா நாளை  ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக தலைமையகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதையயொட்டி,  ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான பணிகளை இன்றே தொடங்குவோம்’ என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில்,  தேர்தல் பணிகளை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுகிவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி,  தொண்டர்களுக்கு அ.தி.மு.க தலைமை அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில், அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிர்பபதாகவும்,    பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்” என்றும்,   அதிமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்று சாதனை படைப்போம். பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம் ; அதிமுக பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.