நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பஈடுகிறது. இன்றைய தினத்தன்று.  எண்ணை மற்றும் சீயக்காய் தேய்த்து குளிப்பது இந்துக்களின் வழக்கம்…. அதுபோல புத்தாடை உடுத்தி வெடிகள் வெடிப்பதும் சந்தோஷ நிகழ்வுகளாகும்…

தீபாவளி பண்டிகை தினத்தில் புத்தாடை, இனிப்பு பலகாரம், பட்டாசு ஆகியவற்றை தாண்டி, அன்று கங்கா ஸ்நானம் எனும் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்ற முக்கிய சடங்கு உள்ளது.

தற்போது உள்ள காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் குறைந்து வருவதால், குறைந்த பட்சம் தீபாவளி அன்றாவது எண்ணெய் தேய்த்துக் குளித்து கங்கா ஸ்நானம் செய்வது அவசியம்.

எண்ணையில் மகா லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, வெந்நீரில் கங்கா தேவி குடிகொண்டிருப்பாள். அதனால், இன்றைய தினம் சுகமுகூர்த்த  நேரத்தில் நாம் எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும். இன்றைய நாளில் எண்ணை தேய்த்து குளிப்பது  கங்கையில் நீராடுவதற்கு சமமானது.

கங்கா ஸ்நானம் செய்யும் நேரம்:

விகாரி வருடம் ஐப்பசி மாதம் 10ந்தேதி (27-10/2019) அன்று தீபாவளி பண்டிகை வருகிறது.  சதுர்த்தசி திதி சித்திரை நட்சத்திரம் கூடிய சுபயோக  சுபதினத்தில்  அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், சுபமுகூர்த்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்வது நல்லது.

புத்தாடை உடுக்க நல்ல நேரம்:

காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுக்ர ஹோரையில் புத்தாடை அணிய வேண்டும்

கேதார கவுரி விரதம், லட்சுமி குபேர பூஜை  செய்ய உகந்த நேரம்:

மாலை 6மணி முதல் 7 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரம்.

தீபாவளி  வழிபாடு செய்வது எப்படி?

பூஜை அறையில், 3 இலை போட்டு, நாம் செய்துள்ள இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அதோடு நாம் புதிதாக வாங்கி இருக்கும் உடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். மின் விளக்குகள் இன்றி  தீப ஒளியில் இறைவனை வழிபடுதல் நல்லது.

பின்னர் புத்தாடைகளை அணிந்து, பெரியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அதையடுத்து சமைத்த விருந்து உணவை நன்றாக  சுவைத்து உண்டு விட்டு, வாங்கி வைத்திருக்கும் பட்டாசைப் பெரியோரின் முன் வெடித்து மகிழலாம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்….