ரியாத்

ஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் பெருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதம் முழுவதும் பகலில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பார்கள்.   அந்த நேரத்தில் உமிழ் நீரை கூட விழுங்காமல் கடினமான விரதம் இருந்து மாதம் முடிந்ததும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இதற்கு இஸ்லாமிய மத குரு மார்கள் பிறையைக் கண்ட பின் பண்டிகை கொண்டாடலாம் என அறிவிப்பு விடுவித்த பின் பண்டிகை கொண்டாடப்படும்.

அவ்வகையில் ரம்ஜான் பிறை இன்று சௌதி அரேபியாவில் கண்டுள்ளது.   அதனால் நாளை (15/06/2018) அன்று ரம்ஜான் பெருநாள் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை.காம் உலகின் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

You may have missed