மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நாளை (  டிசம்பர் 30) யுடன் முடிவதை அடுத்து இனியேனும் கட்டுப்பாடுகள் விலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். டிசம்பர் 30ஆம் தேதிக்குள் (அதாவது 50 நாட்களில்) அவற்றை  வங்கிகளில் கொடுத்து புது நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிகொண்டனர்.
இந்த நிலையில், அரசு அறிவித்த காலக்கெடு நாளை முடிவடைகிறது. இந்த  நிலையில், ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் முதல் நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் நாளைக்குள் டெபாசிட் செய்யத் தவறினால், அந்த ரூபாய் நோட்டுகளை மார்ச் 31- ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also read