நாளை மகா தீபம்: 5அடி உயர தீப கொப்பரை மலை மீது கொண்டு செல்லப்பட்டது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், மலைமீது தீபம் ஏற்றப்படு வதற்கான பெரிய கொப்பரை இன்று மலை மீது மலை மீது கொண்டு செல்லப்பட்டது…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றவுடன் மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது தீப திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் கடந்த 20ந்தேதி மகா தேரோட்டம் நடை பெற்றது.

தீப கொப்பரை சீர் செய்யப்பட்ட காட்சி

நாளை மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், நாளை ( 23ம் தேதி) அதிகாலை பரணி தீபமும், மாலையில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

மகா தீபம் ஏற்றப்படும்  கொப்பரை வெண்கலத்தால் தயாரானது. இதன் உயரம் மட்டும்  5.3 அடி . எடை 200 கிலோ கிரோம். இந்த கொப்பரை கடந்த சில நாட்களாக சீரமைக்கப்பட்டு வந்ததை தொடர்ந்துரு, கொப்பரை முழுவதும்  வர்ணம் தீட்டப்பட்டு, அதில்  அர்த்தநாரீஸ்வரர் படமும் வரையப்பட்டது.

தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லும் காட்சி

இன்று அதிகாலை தீப கொப்பரைக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப் பட்டது. பின்னர்  கொப்பரையை தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப் பட்டது.  சுமார் 10 பேர் கொண்ட ஊழியர்கள் மகா தீப கொப்பரையை மலைமீது கொண்டு சென்றனர்