திருவண்ணாமலை:

நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழாவையொட்டி, மலையில் மகாதீபம் ஏற்பட உள்ளது. இதற்கான தயார் செய்யப்பட்ட கொப்பரை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உலக பிரச்சித்தி பெற்றது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும் நிலையில், கடந்த கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்படி, நாளை மாலை மகாதீபம் ஏற்றுவதற்காக தயாராக இருந்த கொப்பரை செப்பனிடும் பணி நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரைக்கு விசேஷபூஜை செய்யப்பட்டு மலை உச்சிக்கு பணியாளர்களால் எடுத்துச் செல்லப் பட்டது.

நாலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும் நிலையில்,  மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தனாரீஸ்வரர், சாமி சன்னதி யிலிருந்து ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தனாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

மகாதீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றியபின்னர் அன்று இரவு தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது.

மகாதீபத்தை தொடர்ந்து 4 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பம்  உற்சவத்துடன் கார்த்திகை தீப திருவிழா நிறைவடைகிறது. இதறக்க  நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வந்து மகாதீபத்தை வணங்கிச் செல்வர்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மற்றும்  பாதுகாப்பு பணிக்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர்.

மகாதீபம் ஏற்றும் மலைஉச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம் முழுவதும், 2600 சிறப்பு பேருந்துகள், 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை – வேலூர் – திருவண்ணாமலை இடையே டிசம்பர் 9 முதல் 12ம் தேதி வரை சிறப்பு ரயில்.

வேலூர் – கடலூர்(திருப்பாதிரிபுலியூர்) – வேலூர் இடையே டிசம்பர் 9-11ம் தேதிகளில் விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் – திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே டிசம்பர் 9-12ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் ரயில்வே அறிவித்து உள்ளது.

Tomorrow Maha Deepam in Tiruvannamalai: The Kopparai Was carried to hill