நாளை காலை வீடு திரும்புகிறார் ஜெயலலிதா?

சென்னை:

ரண்டு நாட்களுக்கு முன்,  உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நாளை காலை வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

a

முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென  உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்ுத சென்னை  அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  சாதாரண காய்ச்சல்தான் என்றும்,அதே நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டதை அறிந்த , கட்சி தொண்டர்கள் , நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மருத்துவமனை முன்பு பெருந்திரளாக கூடினர். பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதற்கிடையே, நேற்றே ஜெயலலிதா முழு உடல் நலம் பெற்று விட்டார் என்றாலும் நேற்று அshடமி, இன்று (சனிக்கிழமை) நவமி. ஆகவே நாளை திங்கட்கிழமை  காலை நல்ல நேரமான 7.30 முதல் 9 மணிக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஸார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்ற தகவல் பரவியுள்ளது.