மத்திய பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

போபால்:

த்திய பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக நேற்று மாலையுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ம.பி.யில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. அதே வேளையில் ராகுல்காந்தியின்  எளிமையான பிரசாரம் காரணமாக அங்கு காங்கிரசுக்கு செல்வாக்கு ஓங்கியுள்ளதால், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதுபோல காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது டிசம்பர் 11ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்.

கடந்த மாதம் இந்திய  தேர்தல் ஆணையம் மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாவட்டங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த மாதம் 12, மற்றும் 20 தேதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது.

2வது கட்டமாக  மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

3வது கட்டமாக ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.