சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள் விவரம்…

சென்னை:  பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.,

சென்னையில் நாளை (16.04.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

நாப்பாளயம் பகுதி: மணலி நியூ டவுன், விச்சூர் சிட்கோ எஸ்டேட், குளக்கரை, எழில் நகர், அருள் முருகன் நகர், பழைய மற்றும் புதிய நாப்பாளயம், வெள்ளிவாயல்சாவடி, கொண்டகரை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

ஆவடி காமராஜ் நகர் பகுதி: புது நகர் பகுதி, ஆனந்த் நகர், கோவர்த்தனகிரி, கேந்திரியா விகார், வசந்தம் நகர், விவேகனந்தா நகர், காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.