நாளை ராஜஸ்தான், சத்திஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்! கட்சி தலைமை அறிவிப்பு

டில்லி:

ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் காங்கிஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில், நாளை அங்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.

ராஜஸ்தானில் 102 இடங்களில் முன்னணி வகித்து வரும் காங்கிரஸ், அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்ந் தெடுக்கும் வகையில் நாளை, வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல சத்திஸ்கர் மாநிலத்தில் 65 இடங்களில் முன்னணி வகித்து வரும் காங்கிரஸ், அங்கு தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில, சட்டமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில்,  ராய்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமையை ஆலோசித்து,பதவி ஏற்பு குறித்த தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.