நெடுவாசலில் அன்புமணி தலைமையில் நாளை போராட்டம்!

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து கடந்த 12 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் நெடுவாசல் நோக்கி செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெடுவாசலில் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும் என்றார். மேலுரும்  நாளை (1ந்தேதி)  அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெடுவாசலில் மாபெரும் போராட்டம் நடை பெறும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு உள்ள அரசியல் வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி பூர்த்தி செய்ய முயற்சி செய்யும். இதற்கு செய்தியாளர்களும், ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.  ஊடகங்கள் தயவு இருந்தால் பா.ம.க.வால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும். ஆனால் ஊடகங்கள் யார் யாருக்கோ ஆதரவு கொடுக்கிறீர்கள்., ஊடகங்கள் எங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினா