நாளையே கடைசி: 500 ரூபாய் நோட்டு பெட்ரோல் பங்கிலும் செல்லாது….

டில்லி,

ந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் வாங்குவதற்கு நாளையே கடைசி நாளாகும். வரும் டிசம்பர் 15வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இது பொதுமக்களை மேலும் எரிச்சல் அடைய செய்துள்ளது.

கடந்த 8ந்தேதி இரவில் இருந்து நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து. இதைத்தொடர்ந்து மக்கள் வங்கிகளின் வாசலில் தவமிருந்து வருகின்றனர்.

petrol-bunk

புதிய நோட்டுக்கள் போதிய அளவு வங்கிகளுக்கு வந்து சேராததால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே பெரிதும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பல இடங்களில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், குடிநீர்-மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய சேவைகளுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த டிசம்பர் 15 வரை மத்திய அரசு சலுகை அளித்திருந்தது.

இதற்கிடையில், பழைய உத்தரவு மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 2ந்தே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் நாளைமுதல் இந்தியா முழுவதிலும் உள்ள சுங்க சாவடிகளிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.