நியூயார்க்

நாளை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் அகிய மூன்று நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் பற்றி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  அவர் ஒரு வார காலத்தில் 20 இருநாடுகள் மற்றும் மூன்று நாடுகள் கலந்தாலோசிக்கும் பேச்சு வார்த்தைகளில் கலந்துக் கொள்ளப் போகிறார்.  வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி ஐநா சபையின் வருடாந்திர பொதுச்சபை கூட்டத்தில் கலந்து உரையாற்ற உள்ளார்.

அவ்வகையில் நாளை ஜப்பான் வெளிநாட்டு மந்திரி டாரோ கோனோ, மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.  இந்தக் கூட்டத்தில் மூன்று நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் போன்றவை விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் முடிந்ததும் சுஷ்மா பல நாட்டுத் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க உள்ளார். பின்பு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பின் பேரில் ஐ நா சபையின் சீர்திருத்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.