நாளை பெங்களூரு சிறையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் சசிகலாவை சந்திக்கிறார் தங்கத்தமிழ்ச்செல்வன்…..

சென்னை:

டிடிவி தினகரனின் அமமுக, முன்னாள் அமைச்சரும் டிடிவியின் தீவிர ஆதரவாளருமான  செந்தில் பாலாஜி விலகலால் கலகலத்துப்போய் உள்ளது.

இந்த நிலையில், தங்கத்தமிழ்ச் செல்வன் உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நாளை சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க இருப்பபதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி அரசுக்கு எதிராக குரல்கொடுத்த டிடிவி ஆரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் செய்தவறியாது திகைத்து போய் உள்ளனர். இதன் காரணமாக பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியும், ஏன்தான் டிடிவிக்கு ஆதரவு கொடுத்தோம் என்று புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முள்ளாள் அமைச்சராக செந்தில்பாலாஜி, டிடிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதை உறுதிப் படுத்தும் விதமாக டிடிவி தினகரனும் முலாம் பூசப்பட்டவர்கள் என்று அவரை விளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையில் முதல் எடப்பபாடி உள்பட அதிமுகவினரும், பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 10க்கும் மேற்பட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களை தனது பாதுகாப்பில் வைத்திருக்கும் தங்கத்தமிழ்ச்செல்வன் நாளை பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது, அவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு போகாதவாறு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவது குறித்து சசிகலா உறுதி அளிக்கலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையில், நேற்று பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறைச்சாலையில், சசிகலாவிடம் சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.