நாளைய அண்ணா பல்கலைக் கழக தேர்வு ஒத்திவைப்பு

சென்னை

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிழ் பல பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது தேர்வுகள் நடந்து வருகின்றன. கஜா புயல் கடுமையால் தமிழகத்தில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது வீசி ஓய்ந்த கஜா புயலின் காரணமாக கடந்த 15 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த தேர்வு 22 ஆம் தேதிக்கும், 16 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு அடுத்த மாதம் 13 ஆம் தேதிக்கும் முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு 17 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு அடுத்த மாதம் 14 ஆம் தேதிக்கு மாற்றபட்டது.

நாளையும் தேர்வு நடைபெற உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் நிலைமை சீர் அடையாததால்  இந்த தேர்வை அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tomorrow's Anna university exams are postponed due to cyclone
-=-