மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ( கோப்பு படம்)

சென்னை:

ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை நிறுத்தக்கோரியும் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களைக் காக்கக் கோரியும் நாளை (29.07.17 – சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்தப் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க

மணி

வேண்டும் என்றும் அனைவரும் மெரினாவில் கூட வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் லயோலா மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போரட்டத்தின்போது பெருமளவு மாணவர்களும் இளைஞர்களும் மெரினாவில் கூடியதும், இறுதி நாளில் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்ததையும் அடுத்து மெரினாவில் கூட்டம் கூட காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மாணவ அமைப்பின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.