இன்றிரவு சென்னை சென்டிரலில் இருந்து ஒடிசாவுக்குச் சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை

ன்றிரவு சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு வெளி மாநில தொழிலாளர்களுககாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஊரடங்கால் பல வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் மாநிலத்தில் சிக்கி உள்ளனர்.

இவர்களில் பலருக்குப் பணி இல்லாத நிலையால் உணவுக்கும் தங்கவும் துயரப்பட்டு வந்தனர்.

தற்போது மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் இவர்களை அனுப்பி வைக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

அதையொட்டி வெளி மாநிலத் தொழிலாளர்களுக்காக இடைநில்லா ரயில் சேவை நடந்து வருகிறது.

 அவ்வகையில் இன்று இரவு 10 சென்னை சென்டிரலில் இருந்து ஒடிசா மாநிலத்துக்குச் சிறப்பு ரயில் புறப்பட உள்ளது.

இதில் 1140 ஒடிசா மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர்.