ஹோட்டலில் திடீர் தீவிபத்து- சந்தடிசாக்கில் டோனியின் செல்போன்கள் திருட்டு

டில்லி,

கிரிக்கெட் வீர்ர் டோனி தங்கியிருந்த டில்லியில் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட போது அவரது மூன்று செல்போன்களை யாரோ திருடி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியினர் டில்லி ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது அங்கு திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

இந்த திடீர் தீவிபத்து காரணமாக கிரிக்கெட் வீர ர்கள் தங்களது அறைகளில் பொருள்களை போட்டது போட்டபடி வெளியேறினர்.  தீ அணைக்கப்பட்டதும் தங்கள் அறைக்குச் சென்ற ஜார்கண்ட் கேப்டன் டோனியின் அதிக விலைமதிப்புள்ள 3 செல்போன்களை யாரோ திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக டோனி புகார் தெரிவித்த தை  அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.