சென்னை, 

பொறியியல் படிப்பை பயில்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் தற்போது குறைந்து காணப்படுகிறது. அதற்கு படிப்புக்கான வேலை கிடைப்பதில்லை என்பது முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

உண்மை என்னவென்றால் தரமற்ற பொறியியல் நிறுவனங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உடனுக்குடன் கிடைத்துக் கொண்டுதான் உள்ளன.

மாணவர்களின் கல்லூரி தேர்வு அவர்களது வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2016 ம் ஆண்டுக்கான அறிக்கையில் 2014-15 ம் ஆண்டில் 15.89 சதவிதம் பேர் இளநிலை தொழில்நுட்பக் கல்வி பயில பதிவுசெய்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்தவரை ஐஐடி முன்னணியில் உள்ளது. இதைத் தவிர மத்திய மனிதவள வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அளவில் முதல் 10 இடத்தை பிடித்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Vellore Institute of Technology

தனியார் நிகர்நிலை பல்கலை கழகங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்குள்ள பி டெக் படிப்புக்கு வெளிநாட்டு மாணவர்களிடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது.  இதையடுத்து இரண்டாவது இடத்தை Sardar Vallabhbhai National Institute of Technology பிடித்துள்ளது.

Birla Institute of Technology and Science

3 ம் இடத்தில் Birla Institute of Technology and Science அல்லது  BITS என்கிற தொழில்நுட்பக்கல்லூரி உள்ளது. இதற்கு பிலானி, கோவா, ஐதராபாத் ஆகிய இடங்களில் தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன.

இதையடுத்து நான்காவது இடத்தை  நாக்பூரில்  இருக்கும் Visvesvaraya National Institute of Technology பெறுகிறது. இதன் நுழைவுத் தேர்வு JEE Main.
மூலம் நடைபெறும்.   National Institute of Technology or SVNIT

ரூர்கேலாவிலிருக்கும் National Institute of Technology or SVNIT ஐந்தாம்   இடத்துக்கு வருகிறது. மேற்கு வங்கத்தில்  உள்ள சிப்பூரில்   Indian Institute of Engineering Science and Technology.ஆறாவது இடத்தை பெறுகிறது. பெங்கால் இன்ஜினியரிங் கல்லூரி என்று முன்பு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே பழமையான பொறியியல் கல்லூரி இது.

இதேபோல் புனேயில் இருக்கும் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஏழாவதாக இடம் பிடித்துள்ளது.

இதையடுத்து  மங்களூருவில் இருக்கும் National Institute of Technology எட்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஒன்பதாவது இடத்தை அலகாபாத்தில்  இருக்கும் மோதிலால் நேரு இன்ஸ்டுட் ஆப் டெக்னாலஜி தேர்வாகியுள்ளது.

இறுதியாக 10 ம் இடத்தை  கோவையில் இருக்கும் PSG College of Technology பிடித்துள்ளது.