வடஇந்தியாவை வழக்கத்திற்கு மாறாக வாட்டி வதைக்கும் கடுங்குளிர்..!

புதுடெல்லி: இந்தாண்டு குளிர்காலம் வழக்கத்தைவிட அதிகம் வாட்டக்கூடியதாக உள்ளது. காஷ்மீர், புதுடெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில், கடந்தாண்டுகளைவிட குளிர் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலையில், அதிக குளிர் நிலவும் 10 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை குறித்து ஒரு சிறிய பார்வை:

கேய்லாங்

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள கேய்லாங், தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் குளிரான பிரதேசமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி, அப்பகுதியின் வெப்பநிலை -11.4 டிகிரி செல்சியஸ் ஆகும்.

ஸ்ரீநகர்

காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகர், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தபட்ச வெப்பநிலையைப் பதிவுசெய்துள்ளது. அதாவது, -7.8 டிகிரி செல்சியஸ்.

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள கல்பாவில் பதிவான வெப்பநிலை -2.6 டிகிரி செல்சியஸ்.

ராஜஸ்தானிலுள்ள கங்காநகரில் பதிவான வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ்.

ஹரியானா & பஞ்சாபிலுள்ள நார்னாலில் பதிவான வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸ்.

ஹரியானாவின் ஹிசாரில் பதிவான வெப்பநிலை 1.7 டிகிரி செல்சியஸ்.

உத்திரப்பிரதேசத்திலுள்ள சர்க் பகுதியில் பதிவான வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ்.

ஹரியானாவின் பிவானியில் பதிவான வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ்.

இமாச்சலப் பிரதேச தலைநகர் ஷிம்லாவில் பதிவான வெப்பநிலை 5.7 டிகிரி செல்சியஸ்.