உண்மையான கிரிக்கெட் எது என்றால் அது டெஸ்ட் போட்டிதான் என்பர் பலரும். டெஸ்ட் அணியில் இடம்பெறுவதென்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கவுரவமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போதைய டி-20 யுகத்திலும்கூட, டெஸ்ட் போட்டிக்கான மவுசு அப்படியேதான் இருக்கிறது.
இந்நிலையில், தாங்கள் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, விரைவான சதமடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.
* கடந்த 2013ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷிகர் தவான், 85 பந்துகளில் அடித்த சதம்தான், அறிமுக போட்டியில் அடிக்கப்பட்ட முதல் அதிவேக சதம். இந்தப் பெருமையை ஒரு இந்திய வீரர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* கடந்த 2004ம் ஆண்டு தனது அறிமுகப் போட்டியில் விண்டீஸ் அணியின் டுவைன் ஸ்மித் 93 பந்துகளில் அடித்த சதம்தான் இரண்டாவது அதிவேக சதம்.
* இந்தியாவின் பிரித்விஷா, 2019ம் ஆண்டு தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 99 பந்துகளில் அடித்த சதம்தான், மூன்றாவது அதிவேக சதம்.
* ‍மேட் பிரியர் என்ற இங்கிலாந்து வீரர், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 105 பந்துகளில் அடித்த சதம்தான், நான்காவது அதிவேக சதம்.
* அபுல் ஹாசன் என்ற வங்கதேச வீரர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில், 106 பந்துகளில் அடித்த சதம்தான் ஐந்தாவது அதிவேக சதம்.