பெங்களூரு: அமெரிக்காவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமை பதிவில், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வெல்ஸ்பன் ஸ்டீல், மஹிந்திரா ரைஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற இந்திய நிறுவனங்கள், முன்னிலையில் இருக்கின்றன என்று குவெஸ்டல் ஆர்பிட் காப்புரிமை தரவுதள விபரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட நிறுவனங்களுடன், இதர நிறுவனங்களும் சேர்ந்து, கடந்த 2015 – 18 வரையான காலகட்டத்தில் மட்டும் 4600 காப்புரிமை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

அமெரிக்காவில், தொழில்நுட்ப காப்புரிமை பதிவுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2017-18 காலகட்டத்தில் மட்டும், ஒட்டுமொத்த காப்புரிமை பதிவு விண்ணப்பங்களில், தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டும் 65% என்பதாக இருந்தது.

அதேசமயம், இந்த அளவும்கூட தற்காலிகமானதுதான். முழு விபரங்களும் வெளியான பின்னர், எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்த காப்புரி‍மை விண்ணப்பங்களில், செயற்கை நுண்ணறிவு(artificial intelligence), சைபர் செக்யூரிட்டி, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், கிளொட் கம்ப்யூட்டிங் போன்றவையே 50% அளவிற்கு இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.