காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போன 40க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கி உள்ளது. ஆகையால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது.

வெள்ளநீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.  வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராமங்களில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர்மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  அதில் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.  8 பேர் காயமடைந்து காணப்பட அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை.   அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.