கிரிக்கெட் போட்டி தொடக்கத்தின்போது ‘டாஸ்’ போடும் தோனி (பைல் படம்)

ர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், ஆட்டத்தை தேர்வு செய்வது குறித்து இரு அணிகளுக்கு இடையே டாஸ் போடப்படுவது வழக்கம்.

இதற்கு  சிலர் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக, இதுகுறித்து ஐசிசி பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டாஸ் போடும் முறை தொடரும் என ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

கிரிகெட் விளையாட்டில், ஆட்டம் தொடங்கும் முன்னர் இரு அணிகளுக்கு இடையே டாஸ் போட்டு, அதில் வென்றவர்களுக்கு ஆட்டத்தில் பேட்டிங்கா, பவுலிங்கா என்பது குறித்து முடிவு செய்யும் உரிமை தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

ஆனால், சிலர்  தற்போது போட்டிக்கு முன்னர் இனி ஏன் டாஸ் போட வேண்டும் என்பது குறித்து சர்ச்சையை எழுப்பி வந்தனர. இதுகுறித்து  ஐசிசி தீவிர ஆலோசனை செய்து வந்தது.  நேற்று நடைபெற்ற  ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து,  கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறை தொடரும் என முடிவு செய்யப்பட்டது. மேலும், பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு கைகொடுக்கும் வகையில் ஆடுகளம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், போட்டியின் போது வீரர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த டாஸ்போடும் முறை கடந்த 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தின் போது ஆரம்பிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.