நாணயத்தை சுண்டும் பூவா தலையா கிரிக்கெட்டில் நீக்கப்படுமா?

ண்டன்

கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்பத்தில் நாணயத்தை சுண்டி பூவா தலையா போடப்படுவது நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டுப் பார்ப்பது பல இடங்களிலும் நடைபெறும் வழக்கம் ஆகும்.   கிரிக்கெட் போட்டிகளில் ஆரம்பத்தில் எந்த அணி தொடங்க வேண்டும் என்பதை பூவா தலையா போட்டுப் பார்த்தே முடிவு செய்யப்படுகிறது.   இந்த முறை கடந்த 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தின் போது ஆரம்பிக்கப்பட்டதாகும்.

ஒரு நாட்டின் அணி மற்றொரு நாட்டுக்கு சென்று கிரிக்கெட் விளையாடும் போது சொந்த நாட்டு கிரிக்கெட் அணித் தலைவர் காசை சுண்டுவார்.    வந்த நாட்டு அணித் தலைவர் பூவா தலையா என முடிவு செய்வார்.   பிறகு சுண்டியதில் யார் வெல்கிறார்களோ அவர்கள் பேட்டிங்கா அல்லது பந்து வீச்சா என தீர்மானம் செய்வார்கள்.

தற்போது கிரிக்கெட் மிகவும் நவீன மயமாக்கப்பட்டுள்ளது.   டெஸ்ட் பந்தயங்கள் ஒரு நாள் பந்தயமாகி அதன் பின் 50 ஓவர் பந்தயம் ஆகி தற்போது 20 ஓவர் பந்தயம் ஆகி உள்ளது.  இதைப் போல பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகையில்  இன்னும் பழைய முறைப்படி நாணயத்தை சுண்டி  பூவா தலையா போட்டுப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்னும் கோரிக்கை பரவலாக உள்ளது.

அதை  ஒட்டி இங்கிலாந்து நாட்டு அணி ஒரு புதிய முறையை பின்பற்ற உள்ளது. அதன் படி சொந்த நாட்டு அணி முதலில் பேட்டிங்கும் வந்த நாட்டு அணி முதலில் பந்து வீச்சையும் நாணயத்தை சுண்டாமலே தேர்ந்தெடுக்கலாம் என  பின் பற்ற உள்ளது.   அதே நேரத்தில் அதற்கு வேறு சில அணிகள்  ஒப்புதல் அளிக்காமல் சொந்த அணி எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது.  வந்த அணி தனது விருப்பப் பட்டதை தேர்வு செய்யலாம் என யோசனை கூறி உள்ளது.

அனைத்து நாட்டு அணிகளையும் கலந்தாலோசித்த பின் சர்வதேச கிரிக்கெட் அணி இது குறித்து முடிவெடுக்கும் என தெரிய வந்துள்ளது.