சபரிமலையில் இன்று நடை திறப்பு: பம்பையில் போராட்டக்கார்கள், போலீசார் குவிப்பு! பரபரப்பு

பம்பா:

ப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில்,சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 1,500க்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் பெண்களை தடுக்கும் விதமாக போராட்டக்ககாரர்களும் குவிந்து வருகின்றனர்.  இதன் காரண மாக பரபரப்பு நிலவி வருகிறது.

பம்பாவில் போலீஸ் குவிப்பு

கேரள மாநிலத்தின் பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்  என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது இந்துக்களின் ஆகம விதிகளை மீறியது என பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சபரிமலை அய்யப்பனுக்கு ஆபரணங்களை அளித்து வரும் பந்தளம் மகாராஜா குடும்பத்தினர், அய்யப்பனுக்கு பூஜை செய்து வரும் தந்திரிகள் உச்சநீதி மன்ற தீர்ப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான  பெண்களை அனுமதிக்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், கேரள மாநில அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்றுவோம் என பிடிவாதமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பம்பாவில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள்

தற்போது  ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும்.

இதன் காரணமாக உச்சநீதி மன்ற தீர்ப்பின் காரணமாக  கோவிலுக்கு வரும் பெண்களை தடுக்கும் நோக்கில், மாநிலத்தின் பல இடங்களில் அய்யப்ப பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவுக்கு வரும் அய்யப்ப பக்தர்களை சோதனை செய்து வருகின்றனர். பஸ், கார்கள் மற்றும் வேன்களையும் சோதனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. முக்கிய இடமான நிலக்கல் பகுதியில் நூற்றுக்கணக்கில்  போராட்டக்காரர்கள்  குவிந்துள்ளனர்.

இந்நிலையில் நிலக்கல் மற்றும் பம்பையில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். சுமார் , 800 ஆண் போலீசாரும், 200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் வருகை

நிலக்கல்லில் போலீசார் தடியடி நடத்தி 4 பேரை கைது செய்தனர். சபரிமலை சன்னிதானம் பகுதியில், 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதன காரணமாக கேரளவில் பரபரப்பு நிலவி வருகிறது.