மொத்த பாதிப்பு 1,22,757: சென்னையில் மீண்டும் 1200ஐ தாண்டிய கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரிதுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 1,282 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,22,757 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 866 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.