திருப்பதி: திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் வெங்கடேஸ்வரரின் புகழ்பெற்ற மலை ஆலயத்திற்கு செல்லும் யாத்ரீகர்களை ஊரடங்கில் இருந்து நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 4,944 புதிய கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 58,668 ஆகும். 32,336 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.
நாள்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகைக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் ஊரடங்கின் போது மூடப்படும் என்று ஆட்சியர் பாரத் நாராயண் குப்தா கூறினார்.