மகாராஷ்டிராவில் மொத்தமாக ஒரு லட்சம் பேர் குணமடைந்தனர்…..

மும்பை:

காராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 8,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மகராஷ்டிர மாநில அரசு திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 1.86 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,018 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள். மாநிலத்தில் 54.21 சதவீதம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,554 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 80,262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 4,686 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 57 பேர் பலியாகி உள்ளனர்.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கடந்த 29-ம் தேதி, ஜூலை 31-ம்தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆரம்ப கட்டத்தில் ஏற்படுத்தப்பட்டதைப் போன்ற கட்டுப்பாடுகள் மகாராஷ்டிராவில் விதிக்கப்பட்டுள்ளன. மிக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக மக்கள் வெளியே வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 6,04,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் முதல் இடத்தில் அமெரிக்காவும், அடுத்த இடத்தில் பிரேசிலும், 3-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சுமார் 50 ஆயிரம் பாதிப்புதான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.