டெல்லி: நாடு முழுவதும்  இதுவரை 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவிலும், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயனர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாடு முழுவதும்  இதுவரை 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட டிவிட் பதிவில்,

நேற்று (16ந்தேதி)  மாலை 6 மணி நிலவரப்படி  1,90,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 88,57,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரப் பணியாளர்கள் 61,29,745 பேருக்கு முதல் முறையாகவும், 2,16,339 பேருக்கு இரண்டாம் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்ட்டுள்ளது.