சென்னை:  கிண்டியில் உள்ள  சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனால், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால், பொதுமக்கள் முக்கவசம் அணிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்காக பள்ளி கல்லூரிகளும் திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உளளன. இதையடுத்து, கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் விடுதிகளிலும் தங்கியுள்ளனர். அனைவரும் கொரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், பெரும்பாலோனோர், அதை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாகவே, ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறி உள்ளது.

விடுடித மெஸ்ஸில் ஊழியர்களுக்குப் பரவிய கொரோனா தொற்று மாணவர்களுக்குப் பரவியதா? அல்லது வெளியே சென்று வந்த மாணவர்கள் மூலம் அனைவருக்கும் பரவியதா? எனத் தெரியாத நிலையில்,  சில மாணவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  டுக்கப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 87 மாணவர்கள் உட்பட 104 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய தமிழக  சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், எடுக்கப்பட்ட மற்றும் மேலும் எடுக்கப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தனர்.

”செறிவூட்டல் பரிசோதனை மூலம் முழுவதுமாகப் பரிசோதனை செய்யப்படும். மாணவர்கள் கட்டுப்பாடில்லாமல் இருப்பதே இதுபோன்ற நிலைக்குக் காரணம். அரசு சொல்லும் பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,  ஐஐடி சம்பவத்தைப் பாடமாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கட்டாயம் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ஐஐடியில் நடத்தப்பட்டு வரும தொடர் பரிசோதனையில் மேலும் 79 மாணவர்களுக்குக்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  183 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை  514 பேருக்கு கொரோனா சோதனை பரிசோதனை செய்யப்பட்டதில் 183 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.