சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு வெளியிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே, 26 லட்சத்துக்கு 74 ஆயிரத்து, 446 ஆக (6,26,74,446 ) உயர்நதுள்ளது. அதிக வாக்காளர்கள் அடங்கிய தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூரும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக, சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியும் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில்,  ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.  இங்கு  6,94,845 வாக்காளர்கள்  உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள்: 3,48,262; பெண் வாக்காளர்கள்: 3,46,476; மூன்றாம் பாலினம்: 107 பேரும் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் துறைமுகத் தொகுதி மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள மொத்த வாக்காளர்கள எண்ணிக்கை  1,76,272. இவர்களில், ஆண் வாக்காளர்கள்  91,936 பேரும்,  பெண் வாக்காளர்கள்  84,281 பேரும்,  மூன்றாம் பாலினம் வாக்காளர்கள்  55 பேரும் உள்ளனர்.

இந்த ஆண்டு புதியதாக 18-19 வயதுக்குட்பட்ட 8,97,694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்: 4,80,953; பெண்: 4,16,423 மற்றும் மூன்றாம் பாலினம்: 318)

ஜனவரி 1 ஆம் தேதி 18 ஆண்டுகளை பூர்த்தி செய்த, ஆனால் தேர்தல் பட்டியலில் தங்கள் பெயர்களைக் காணாத அனைத்து தகுதியுள்ள நபர்களும் ஈரோக்களுக்கு படிவம் -6 கொடுத்து தங்கள் பெயர்களைச் சேர்க்கலாம்,

https://t.co/N8hivUfBVg வழியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் மற்றும்  google play store இல் கிடைக்கும் ‘Voter Helpline App’ மூலம் வாக்காளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.