திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் இன்று கொரோனாவால் மரணம்…! ஒட்டுமொத்த பலி 326 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை தினமும் வெளியிடும். அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 1927 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பாதிப்பு 2000ஐ நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனும் இதில் அடக்கம். ஒட்டு மொத்தமாக தமிழக அளவில் பலி எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளது. இன்று 1008 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் அதன் எண்ணிக்கை 19,333 என உயர்ந்துள்ளது.