இந்தியாவெங்கும் தனிமைப்படுத்தலில் இருப்போர் எண்ணிக்க‍ை 31.6 லட்சம் பேர்!

--

புதுடெல்லி: தற்போதைய நிலையில் நாடெங்கிலும் சுமார் 31.6 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, இந்தியாவில் மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மாநிலங்களிலேயே, உத்திரப்பிரதேசத்தில்தான் அதிகளவு மக்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அதற்கடுத்து மராட்டியத்தில் அதிகம்பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில், 11 லட்சத்திற்கு மேற்பட்டோரும், மராட்டிய மாநிலத்தில் 7.27 லட்சம் பேரும், குஜராத்தில் 3.25 லட்சம் பேரும், ஒடிசாவில் 2.4 லட்சம் பேரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

மேலும், உத்திரப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில், இல்லங்களிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.