தள்ளாடும் தமிழகம்: மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இளைஞர்

]வேலூர்:

பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய வாலிபர் முயன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

a

வேலூர் மாவட்டம் பனமடங்கி பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்  நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த இளைஞர், தனது வண்டியை நிறுத்திவிட்டு, மூதாட்டியை நெருங்கினார். திடீரென, மூதாட்டியை பேருந்துக்கு பின்புறம் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த மூதாட்டி, பயந்து அலறவே விட்டிருக்கிறார்.

உடனடியாக மூதாட்டி, காவலர்களிடம் புகார் அளிக்கவே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது வாலிபர் முழு போதையில் இருந்தார். விசாரணையின் தனது பெயர் ராமமூர்த்தி என்றும் வயது 23 என்றும் தெரிவித்தார்.

மது, அருந்துபவரை மட்டுமின்றி அடுத்தவரையும். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் உதாரணம்.

கார்ட்டூன் கேலரி