மக்களவை தேர்தல் 2019: ஒடிசாவில் பாஜக – பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி

ஒடிசா மாநில மக்களவை தேர்தலில், பாஜக – பிஜு ஜனதா தளம் இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 100 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

ஒடிசா மாநிலத்தை பொருத்தவரை பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. காலை 11.45 மணி நிலவரப்படி,

பிஜு ஜனதா தளம்: 13 தொகுதிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி: 07 தொகுதிகள்

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.