டில்லி

த்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் இனி தேவையின்றி பேசப்போவதில்லை என கூறி உள்ளார்.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கே ஜே அல்ஃபோன்ஸ் பதவி ஏற்றதில் இருந்தே ஒன்றுக்குப் பின் ஒன்றாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகிறார்.   மாட்டுக்கறி விவகாரம்,   பெட்ரோல் விலை என அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சமூக வலை தளங்களில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.    முன்னாள் அதிகாரியான இவர் பாஜக வில் 2011ல் இணைந்தார்.   அதற்கு முன்பு அவர் கேரள சட்டசபை  உறுப்பினராக 2006 முதல் 2011 வரை பதவி வகித்தார்.

தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் அல்போன்ஸ், “இனி நான் தேவையற்ற எந்த ஒரு கருத்தையும் பேச மாட்டேன் என சபதம் எடுத்துள்ளேன்.   எனக்கு சம்பந்த்ப்பட்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவேன்.  சம்பந்தம் இல்லாத விஷயங்களைப் பேசமாட்டேன்.   நான் கூறுவதை  திரித்து சமூக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.   அதனால் நகைச்சுவையாகக் கூட என்னால் எதுவும் பேச முடியவில்லை”  என தெரிவித்துள்ளார்.