குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.   குற்றால அருவிகளில் அளவுக்கு மீறி நீர் வரத்து இருந்தது.   அதை ஒட்டி சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் குளிக்கவும் அருவிகளுக்கு அருகில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

 

இவ்வாறு ஆறு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்ததால் குற்றாலத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.    தற்போது இந்த பகுதிகளில் நீர் வரத்து குறைந்து வெள்ளம் நின்று விட்டது.

அதனால் குற்றாலத்தில் அமைந்துள்ள மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இது சுற்றுலா பயணிகளிடையே மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.