நாளை முதல் கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

னாஜி

நாளை முதல் கோவா மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவி வருவதால் கடந்த மார்ச் 25 முதல் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊரடங்கு தற்போது சிறிது சிறிதாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கோவாவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

கோவா மாநிலத்தின் முக்கிய தொழில் சுற்றுலா ஆகும்.

கோவா மாநிலத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்க வசதியாக 250 ஓட்டல்களை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவாவுக்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.

இல்லை எனில் கோவாவில் கட்டாய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

இந்த தகவல்களை கோவா மாநில சுற்றுலா அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் தெரிவித்துள்ளார்.