அக்டோபர் 15ந்தேதி முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! மாவட்ட நிர்வாகம்

நாமக்கல்: அக்டோபர் 15ந்தேதி முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக  மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, வரும் 15ந்தேதி முதல், தியேட்டர்கள் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. அதுபோல, வருகின்ற அக்.15 முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறவிக்கப்பட்டுஉள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சுற்றுலாத் தளங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மாவட்ட கலெக்டர் மலர்விழி அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அங்கு பொதுமக்கள் குளிக்கும் பிரதான அருவி மற்றும் நடைபாதை அதிக நீர்வரத்து காரணமாக சேதமடைந்து இருப்பதைக் கண்ட அவர் ஒரு வாரத்திற்குள் இவற்றை சரி செய்து சீரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடட்டதுடன், வருகிற 15-ஆம் தேதி முதல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பயணிகள் வர அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.