நடிகர் டொவினோ தாமஸுக்கு படப்பிடிப்பில் காயம் ; தனியார் மருத்துவமனையில் அனுமதி….!

ரோஹித் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வரும் மலையாளத் திரைப்படம் ‘களா’.

பல மாதங்களுக்குப் பின் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கான அனுமதியை மத்திய அரசு கடந்த மாதம் அளித்தது.

அதை தொடர்ந்து செப்டம்பர் 7-ம் தேதி ‘களா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது நடந்து வருகிறது. இன்று ஒரு சண்டைக்காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில் நாயகன் டொவினோவுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது.

செப்டம்பர் 7-ம் தேதி ‘களா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது நடந்து வருகிறது. இன்று ஒரு சண்டைக்காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில் நாயகன் டொவினோவுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன்தான் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த படப்பிடிப்பில் டொவினோவுக்குக் காயம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டு, ‘எடக்காட் பெட்டாலியன் 06’ என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் டொவினோ தீக்காயங்களுக்கு ஆளானார்.