சிவகாசி:

மிழக மதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இருவவர் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவின் நிறைவடையும் நேரத்தில் பின் வரிசையில் இருந்து செய்தியாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தனர். திடீரென அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்கள் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை கவனித்த போலீஸார் உட்பட பலர் அவர்களை தடுத்து காப்பாற்றினர். இதனால் விழாவில் பெரும் பரபரப்ப ஏற்பட்டது.   முதல்வர் உட்பட அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக காவல்துறையினர் அந்த இருவரையும்  அழைத்துச் சென்று விசாரித்தனர். இவர்கள், ராஜபாளையம் நரிமேடு இந்திரா காலனியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரின் தாயார் பார்வதி(52) மற்றும் மனைவி கனக லட்சுமி(21) என்பது தெரியவந்தது.

முனீஸ்வரனை ஒரு வழக்கு தொடர்பாக ராஜபாளையம் போலீஸார் சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்ற நிலையில், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், இது குறித்து கேட்டால் காவல்துரையினர் பதில் அளிக்காமல் தரக்குறைவாக நடத்துகிறார்கள் என்றும் அந்த இரு பெண்களும் தெரிவித்தனர்.

மேலும், முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் தீக்குளித்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கருதியதாகவும் கூறினார்கள்.

இந்த சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், முதல்வர் விழாவுக்கு வந்த செய்தியாளர்கள் உட்பட பலரையும் காவல்துறையினர் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதித்தனர். இந்நிலையில் ஐந்து  லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் இருவரும்  உள்ளே நுழைந்துள்ளனர். மேலும்,  பின் வரிசையில் இருந்து விழா மேடை அருகே வந்திருக்கிறார்கள்.

ஆகவே காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் குற்றம் சாட்டப்படுகிறது.