காற்று மாசுபாடு: 2016ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பலி

காற்று மாசுபாட்டால் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சம் குழந்தைகள் இந்தியாவில் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுதும் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உடல்நலம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் காற்று மாசுபாடு மற்றும் காற்றில் கலந்துள்ள நஞ்சை பற்றி  விவாதிக்கப்பட்டது. காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் தெரிய வந்திருக்கிறது.  இந்தப் பாதிப்பினால் கடந்த 2016ஆம் வருடம் மட்டும் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் பலியாகியிருக்கின்றன. அதே காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பலியாகியிருக்கின்றன.

குழந்தைகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக காற்று மாசுபாடு இருக்கிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 10ல் ஒரு குழந்தை சுவாச பிரச்னையால் பலாயவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.