28% ஜிஎஸ்டி: மோடி அரசின் அதிக வரிவிதிப்பால், விரிவாகத்தை நிறுத்தியது டொயோட்டோ…

டெல்லி: இந்தியாவில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது. இதனால் தனது இந்திய கார்தயாரிப்பு விரிவாக்க பணிகளை நிறுத்துவதாக டொயோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட தால்,  கார், பைக் ஆலைகளை பல முன்னணி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடியன.  இதனால், உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே செயல்பட்டு வரும் டொயோட்டா கார் ஆலையிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை பொறுத்து மறு அறிவிப்பு வெளியிடும் வரை கார் ஆலையை மூடுவதாக டொயோட்டா கார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கார்களுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால், கார்கள் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், தனது விரிவாக்க ஆலையை மூடுவதாக பிரபல கார் நிறுவனமான டோயட்டோ தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக கூறிய டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன்,  “ இந்தியாவில், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான வரிகளை அரசாங்கம் மிக அதிகமாக வைத்திருக்கிறது, இதனால், நாங்கள் எங்களது நிறுவனங்களை விரிவாக்குவது கடினமாக உள்ளது. இருந்தாலும், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம், ஆனால் நாங்கள் தொழிலை விரிவாக்கவும் முடியாது” அரசின் வரி தொடர்பான நடவடிக்கைகளை  வெளிநாட்டு முதலீட்டை ஊக்கமிழக்க செய்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது நாட்டில் மின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்பட்டு, விற்பனையை அரசு ஊக்கு வித்து வருகிறது. ஆனால், தற்போது 5%ஆக இருக்கும் மின்சார வாகனங்களுக்கான வரிகளும், அதன் விற்பனை அதிகரித்தவுடன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

வரிகளைக் குறைப்பதற்கான அமைச்சகங்களிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும், வரி குறைப்பு குறித்து உடனடி உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை  மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  தெரிவித்ததாக கூறிய விஸ்வநாதன், இந்தியாவில் ஆட்டோ மொபைல் வாகனங்கள் விற்பனை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பாக சரிவைச் சந்தித்தது, குறைந்தது அரை மில்லியன் வேலைவாய்ப்புகள் இழந்தன.

மந்தநிலைக்கு முன்னர் காணப்பட்ட நிலைகளுக்கு விற்பனை திரும்புவதற்கு நான்கு ஆண்டுகள் என்றும், இதை  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால், அவர்களுக்கு இது புரியாத ஒன்று. ஒரு தயாரிப்பு சிறப்பாகச் செயல்படுவதற்கான அறிகுறி தென்படுகையில், அரசு அதிக வரி விகிதத்துடன் தாக்குகிறார்கள்” என்று அவர் கூறினார்.

ஜ்ப்பானை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றான டோயோட்டா  1997 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது முதல் ஆலையை அமைத்தது.  ஆனால், தற்போது மோடி அரசில் விதிக்கபடும் அதிப்படியான வரி காரணமாக, தனது விரிவாக்கத்தை ரத்து செய்துள்ளது.