ஜக்கி போல கோபப்பட்ட டி.ஆர்!

மீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த  சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ்,  தன்னை “சத்குரு” என்றே அழைக்க வேண்டும். ஜக்கி என அழைக்கக்கூடாது என கோபப்பட்டார்.

“வெளிநாட்டிலிருந்து  கிறிஸ்துவ மத குரு வந்தால் போப் என்று அழைக்கிறீர்களே..  என்னை சத்குரு என்று அழைக்கக்கூடாதா” என்று கேட்டார்.

அதே போல இன்று நடிகர்.. ஸாரி.. அரசியல் தலைவர் டி.ராஜேந்தர் கோபப்பட்டார்.

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வந்தவர் வழியில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , “என் பேட்டியை வெளியிடும்போது நடிகர் டி.ராஜேந்தர் என்று ஊடகங்களில் போடுகிறார்கள். நான் நடிகனா…? தலைவர்..  லட்சிய திமுகழகத்தின் தலைவர்.. இனிமே தலைவர் என்றே போட வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

(அய்யய்யோ.. இந்த மேட்டரை சினிபிட்ஸ்ல போட்டுட்டமே… இதுக்கும் கோபப்படுவாரோ..)

Leave a Reply

Your email address will not be published.