Random image

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக முதன்மை செயலாகராக துரைமுருகன் இருந்த வந்த நிலையில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட நிலையில், துரைமுருகன் திமுக பொருளாளராக போட்டியின்றி தேர்வானார்.

திமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலையில், துரைமுருகன் தனது முதன்மை செயலாளர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டார். அந்த பதவி யாருக்கும் கிடைக்கும் என கட்சி தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அந்த பதவி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு கிடைத்துள்து.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.