துரைமுருகனுடன் அளவளாவிய ஓபிஎஸ் மகன்! தேனியில் பரபரப்பு

மதுரை:

மிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் இன்று தேனி சட்டமன்ற தொகுதியில் ஆய்வு செய்த நிலையில், குழுவின் தலைவர் துரைமுருகன், உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுடன், ஓபிஎஸ் மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் அளவளாவும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில்,  எம்.எல்.ஏ.க்கள் கீதா, பாஸ்கர், உதயசூரியன், பழனிவேல் தியாகராஜன், முகமது அபுபக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்  பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட வரும் அரசுத் திட்டப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

இன்று தேனி பகுதியில் ஆய்வு செய்த குழுவினரை, தேனி பாராளுமன்ற உறுப்பினரும், துணைமுதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார்.

அப்போது, அவரிடம் துரைமுருகன், டிஆர்பி ராஜா ஆகியோர் சிரித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.