பெங்களூரு

பெங்களூருவில் ஒரு ஐடி ஊழியர் கொரோனா வைரஸால் பாதிக்கபடதை அடுத்து  அவருக்குத் தொடர்புள்ள அனைவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று சீனா முழுவதும் பரவிப் பல உலக நாடுகளையும் பாதித்து வருகிறது.   தற்போது சீனாவில் இந்த வைரஸ் தாக்கம் குறைந்துள்ள போதிலும் மற்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 45க்கும் மேல் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் கண்ட்றியபட்டுள்ளனர்.   தமிழகத்தில் சென்னையில் ஒருவ்ர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்போது இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பெங்களூருவிலும் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன.

பெங்களூருவை சேர்ந்த 40 வயதான ஐடி ஊழியர் ஒருவர் அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வந்துள்ளார்.  நான்கு நாட்களுக்கு பிறகு இவருக்கு உடல்நலக் கோளாறு இருந்தால்ல் மருத்துவரிடம் சென்றுள்ளார்.  அங்கு நடந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது மனைவி மற்றும் மகளுக்கும்  இதே அறிகுறிகள் உள்ளன.  அவர்களுக்கு இதுவரை வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்படவில்லை எனினும் அவர்களும் தனிமைப் படுத்தபட்டுள்ளனார். அந்த ஐடி ஊழியர் ராஜிவ் காந்தி நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் குடும்பத்தினர் மற்றும் அவரது ஓட்டுநர், ஓட்டுநரின் குடும்பத்தினர் ஆகியோர் அவரவர் இல்லத்தில் தனிமப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஐடி ஊழியர் இதுவரை தொடர்பு கொண்டவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.