ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய டிராக் செயலி! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:

ம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய டிராக் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதா தமிக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டபேரவையில் தெரிவித்தார்.

அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வர தாமதம்  ஆகிறது, இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது  என்று தி.மு.க. உறுப்பினர் சண்முகையா  சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சண்முகையாவின் குற்றச்சாட்டை மறுத்தார். மற்ற நாடுகளை விட தமிழகத்தில்தான் ஆம்புலன்ஸ் செயல்பாடு விரைவாக உள்ளதாகவும்,   மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராமப் பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்து விடுகிறது என்று தெரிவித்தார்.

மேலும்,  200 புதிய ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதுபோல,  ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தவர், ஆம்புலன்ஸ் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் பிரத்யேக செயலி விரைவில் அறிமுகப்படும் என்றும் கூறினார்.