இந்த நிலையில், தற்போது,  தனது கைலாசா நாட்டின் கரன்சியை பற்றி பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.  அதில், கைலாசா நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது என்றும், அவை முழுக்க முழுக்க  முழுக்கவே பொற்காசுகள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொற்காசுகளுக்கு, ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார்.

இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என  கூறி யுள்ளவர், உள்நாட்டுக்கு ஒரு கரன்சி, வெளிநாட்டுக்கு மற்றொரு வகை கரன்சி என்றும், கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.